பழிக்குப் பழி
----------------------
(சரியாக 8289 நாள் 5.20 மணிநேரம் 30 நொடிக்குப்பின்)
அடி
உன் கண்ணக்குழியில்
வீழ்வேனோ ?
இல்லை
வாழ்வாய்! என்று
இதழ் சேர்த்தாள்..
இதழ் பேச்சில்
இரவு உறங்க
மறந்தது இல்லை
மறுத்தது ....
முத்தத்திற்கு முத்தம்
பழிக்கு பழி !..
அட நித்தமும்
தான் பழிவாங்கேன்.
மையில்லா பேனாவும்
எழுதும் உன்
கண்ணக்குழி
போதையில் ..
போதை தவறென்பர்
உன் கண்ணம்
பார்க்காதவர் ...
மை சிந்தி
Friday, January 25, 2019
Thursday, June 9, 2016
கண்மைக்காரி-3
முத்தத் தொடர்ச்சி
--------------------------------
அறியாப் பிள்ளை
தந்த தொல்லை
அந்த முத்தம் ..!
ஐயோ ! அப்பிடி கொஞ்சக்
கூடாது மா ! என்று
குட்டிக் கதிரிடம்
கத்தி என்ன ஆகும் !
அழகாய் திரும்பி
'பாப்பா என்னுது'
பரவச பதில் !...
அதோடவா விட்டான் !
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'.........
என்று சொன்னதை கூட
எண்ணிவிடலாம் -அவன்
குடுத்த முத்தங்கள்
எண்ணில் அடங்கா
ஆனால் என்னில்
அடங்கும் !
யாழினி(து) தான்
முத்தம் தந்தே இனிமை
சேர்த்திருக்கிறான்....
மின்சாரம்
-------------------------
அவள் விரல்
படப் பாய்ந்து
பரவும் ...
நாடி , நரம்பு
தேடிப்பிடித்து
நிரப்பும் !.....
விரல் பட்டால் போதும்
மூளையின் மடிப்புகள்
அகன்று மின்னிப்
பளபளக்கும் !
விரல் வழி
மின்சாரம் -எடிசன் அறியாத் தத்துவம்
--------------------------------
அறியாப் பிள்ளை
தந்த தொல்லை
அந்த முத்தம் ..!
ஐயோ ! அப்பிடி கொஞ்சக்
கூடாது மா ! என்று
குட்டிக் கதிரிடம்
கத்தி என்ன ஆகும் !
அழகாய் திரும்பி
'பாப்பா என்னுது'
பரவச பதில் !...
அதோடவா விட்டான் !
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'.........
என்று சொன்னதை கூட
எண்ணிவிடலாம் -அவன்
குடுத்த முத்தங்கள்
எண்ணில் அடங்கா
ஆனால் என்னில்
அடங்கும் !
யாழினி(து) தான்
முத்தம் தந்தே இனிமை
சேர்த்திருக்கிறான்....
மின்சாரம்
-------------------------
அவள் விரல்
படப் பாய்ந்து
பரவும் ...
நாடி , நரம்பு
தேடிப்பிடித்து
நிரப்பும் !.....
விரல் பட்டால் போதும்
மூளையின் மடிப்புகள்
அகன்று மின்னிப்
பளபளக்கும் !
விரல் வழி
மின்சாரம் -எடிசன் அறியாத் தத்துவம்
Wednesday, June 8, 2016
கண்மைக்காரி -2
ஈர முத்தம்
---------------------
அவன் -கதிர்
திமிர் பிடித்தவன் -ஆம்
என்னை பிடித்தவன்
அல்லவா!
எங்கு தொடங்கும்
இந்தக் காதல் ?
எங்களுக்கு முத்தத்தில்
தொடங்கியது !
ஆம் ! முரட்டுப் பயல்
முத்தத்தில் தொடங்கினான் !
பார்த்த மறு நொடி
முத்தம் !
உதட்டில் உதடு
தொட்டு ஈரமுத்தம் -முதல்
அசைவ முத்தம்
ஏன்டா முரடா!
பார்த்தவுடன் முத்தமா ?
பாலில் பெண்செய்து
ரோஜாவை இதழ் - என்றால்
எவன் விடுவான்
பதில் கேட்டால்
வெட்கம் தருவான்
செல்ல முட்டாள் !
பிறந்த சில நொடியில்
'பாப்பா பார் ' என்றாவுடன்
கிடைத்தது ஈர முத்தம் !
பாப்பா எனக்கு- என்று
அன்றே என்னை reserve
செய்திருக்கிறான்
செல்ல முரடன் ..
(யாழினி - முதல் நாள்
கதிர் - ஐந்து வயது )
---------------------
அவன் -கதிர்
திமிர் பிடித்தவன் -ஆம்
என்னை பிடித்தவன்
அல்லவா!
எங்கு தொடங்கும்
இந்தக் காதல் ?
எங்களுக்கு முத்தத்தில்
தொடங்கியது !
ஆம் ! முரட்டுப் பயல்
முத்தத்தில் தொடங்கினான் !
பார்த்த மறு நொடி
முத்தம் !
உதட்டில் உதடு
தொட்டு ஈரமுத்தம் -முதல்
அசைவ முத்தம்
ஏன்டா முரடா!
பார்த்தவுடன் முத்தமா ?
பாலில் பெண்செய்து
ரோஜாவை இதழ் - என்றால்
எவன் விடுவான்
பதில் கேட்டால்
வெட்கம் தருவான்
செல்ல முட்டாள் !
பிறந்த சில நொடியில்
'பாப்பா பார் ' என்றாவுடன்
கிடைத்தது ஈர முத்தம் !
பாப்பா எனக்கு- என்று
அன்றே என்னை reserve
செய்திருக்கிறான்
செல்ல முரடன் ..
(யாழினி - முதல் நாள்
கதிர் - ஐந்து வயது )
Tuesday, June 7, 2016
கண்மைக்காரி -1
கண்மைக்காரி
--------------------------
எழுதித் தொலைத்த-பல
கதைகள் உண்டு ..
இது எழுதும் போது -நான்
தொலைந்த கதை ..!
மை பூசி கண் ஓரம்
விரல் வைத்து இழுப்பாள்
மையோடு நானும்
மையல் ...!
கவிதை எழுத நான்
யோசிப்பதே இல்லை -அவளை
வாசித்து விடுவேன் .
அவள் -யாழினி .
யாழ் இனிதோ
யான் அறியேன்
இனி , நீ இனிது
நீ மட்டும் இனிதென
யாம் அறிவோம்
எனைப் பார்த்து விரியும்
அவள் கண் போலே
கண்மைக்காரி இனி இனிதாய்........
--------------------------
எழுதித் தொலைத்த-பல
கதைகள் உண்டு ..
இது எழுதும் போது -நான்
தொலைந்த கதை ..!
மை பூசி கண் ஓரம்
விரல் வைத்து இழுப்பாள்
மையோடு நானும்
மையல் ...!
கவிதை எழுத நான்
யோசிப்பதே இல்லை -அவளை
வாசித்து விடுவேன் .
அவள் -யாழினி .
யாழ் இனிதோ
யான் அறியேன்
இனி , நீ இனிது
நீ மட்டும் இனிதென
யாம் அறிவோம்
எனைப் பார்த்து விரியும்
அவள் கண் போலே
கண்மைக்காரி இனி இனிதாய்........
Subscribe to:
Comments (Atom)





