ஈர முத்தம்
---------------------
அவன் -கதிர்
திமிர் பிடித்தவன் -ஆம்
என்னை பிடித்தவன்
அல்லவா!
எங்கு தொடங்கும்
இந்தக் காதல் ?
எங்களுக்கு முத்தத்தில்
தொடங்கியது !
ஆம் ! முரட்டுப் பயல்
முத்தத்தில் தொடங்கினான் !
பார்த்த மறு நொடி
முத்தம் !
உதட்டில் உதடு
தொட்டு ஈரமுத்தம் -முதல்
அசைவ முத்தம்
ஏன்டா முரடா!
பார்த்தவுடன் முத்தமா ?
பாலில் பெண்செய்து
ரோஜாவை இதழ் - என்றால்
எவன் விடுவான்
பதில் கேட்டால்
வெட்கம் தருவான்
செல்ல முட்டாள் !
பிறந்த சில நொடியில்
'பாப்பா பார் ' என்றாவுடன்
கிடைத்தது ஈர முத்தம் !
பாப்பா எனக்கு- என்று
அன்றே என்னை reserve
செய்திருக்கிறான்
செல்ல முரடன் ..
(யாழினி - முதல் நாள்
கதிர் - ஐந்து வயது )


Fantastic
ReplyDelete- Meena
அருமை
ReplyDeleteSuperb ...
ReplyDeleteInnum neriya elutha valthukkal
அருமையான கவிதை,
ReplyDeleteசிறப்பான உவமை,
மொத்தத்தில் நிறைவு..!
Ha ha vera level bro 😉😄
ReplyDeleteNice..
ReplyDelete