Thursday, June 9, 2016

கண்மைக்காரி-3

முத்தத் தொடர்ச்சி
--------------------------------
அறியாப் பிள்ளை
தந்த  தொல்லை
அந்த முத்தம் ..!

ஐயோ ! அப்பிடி கொஞ்சக்
கூடாது மா ! என்று
குட்டிக் கதிரிடம்
கத்தி என்ன ஆகும் !


அழகாய் திரும்பி
'பாப்பா என்னுது'
பரவச பதில் !...

அதோடவா  விட்டான் !
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'.........
என்று சொன்னதை கூட
எண்ணிவிடலாம் -அவன்
குடுத்த முத்தங்கள்
எண்ணில் அடங்கா
ஆனால் என்னில்
அடங்கும் !

யாழினி(து) தான்
முத்தம் தந்தே இனிமை
சேர்த்திருக்கிறான்....

மின்சாரம்


-------------------------

அவள் விரல்
படப் பாய்ந்து
பரவும் ...

நாடி , நரம்பு
தேடிப்பிடித்து
நிரப்பும் !.....

விரல் பட்டால் போதும்
மூளையின் மடிப்புகள்
அகன்று மின்னிப்
 பளபளக்கும் !

விரல் வழி
மின்சாரம் -எடிசன் அறியாத் தத்துவம்


2 comments:

  1. விரல் வழி
    மின்சாரம் -எடிசன்
    அறியாத் தத்துவம்....pinetenga thala

    ReplyDelete
  2. அறியாப் பிள்ளை
    தந்த தொல்லை
    அந்த முத்தம் ..! aarambam ae asathala iruku :)

    ReplyDelete